கிளப் உலக கோப்பை கால்பந்து: பைனலில் பாரிஸ் செயிண்ட்

7 hours ago 3


புளோரிடா: கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இன்று அதிகாலை நடந்த 2வது அரையிறுதி போட்டியில், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் கால்பந்து கிளப், ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணி வெற்றிபெற்று பைனலுக்குள் நுழைந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பைனலில், செல்சியா எஃப்.சி. கால்பந்து அணியுடன் பாரிஸ் செயிண்ட் பலப்பரீட்சை நடத்தும்.

The post கிளப் உலக கோப்பை கால்பந்து: பைனலில் பாரிஸ் செயிண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article