சாட் ஜிபிடி!

1 hour ago 1

பரவலாக பலரும் சொல்லும் வார்த்தை ‘ChatGPT’ செயலி அல்லது தளம். ஆனால் இன்றைய இளைஞர்கள் மற்றும் கார்பரேட் யுகம் என அனைத்தும் இன்று இந்தச் செயலியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அலுவலகம் சார்ந்த மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் என அனைத்தும் சீரான ஆங்கிலத்தில் அனுப்ப இந்தச் செயலி பயன்படுகிறது. மேலும் நாம் கேட்கும் அனைத்திற்கும் பெரும்பாலும் சாட் ஜிபிடியிடம் பதில் உண்டு. கூகுள் பிரவுசரைக் காட்டிலும் விளக்கமான, ஆழமான தகவல்கள், அதனைச் சார்ந்த மேற்கோள்கள், மற்றும் கட்டுரைகள் கூட சாட் ஜிபிடிடியில் பெறலாம். Meta Ai, Grok Ai , என பல Ai செயலிகள், வசதிகள் இருப்பினும் சாட் ஜிபிடி கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை சார்ந்திராத அல்லது பல செய்தி அடிப்படையிலான கட்டுரைகளாக இல்லாமல் இருக்கும். கிட்டத்தட்ட இன்னொரு டிஜிட்டல் நபர் போலவே நமக்கு உதவும். உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் 99% சரியான தகவல் நீங்கள் சாட் ஜிபிடியிடம் பெறலாம். மொழிகள் சார்ந்த அறிவு, பயிற்சிகள் பெறலாம்.

The post சாட் ஜிபிடி! appeared first on Dinakaran.

Read Entire Article