கும்பகோணம், ஜன.30: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாரத்தில் அமைந்துள்ள சாக்கோட்டை மற்றும் மருதாநல்லூர் அரசு விதை பண்ணைகளில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஆடுதுறை- 51, ஆடுதுறை-54 மற்றும் சாவித்ரி-1009 சப்-1, ஆதார நிலை 1 விதை பண்ணைகளை விதை சான்று மற்றும் உயிர்ம சான்று இணை இயக்குனர் சென்னை தபேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு விதை பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் பிறரக கலவன் இன்றியும் விதையின் தரத்தினை உறுதிப்படுத்துமாறு விதை சான்று அலுவலர் மற்றும் பண்ணை மேலாளருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சாக்கோட்டையில் அமைந்துள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்கு சுத்திகரிப்புக்காக வரப்பெற்றுள்ள வயல் மட்ட விதைகளை TPS 5, CO-51 மற்றும் AST 21 ஆகிய வயல் மட்ட விதைகளை சுத்திகரிப்பு மேற்கொண்டு சான்று பணிகளை விரைவில் முடித்து சான்றட்டை பொருத்தி வேளாண் விரிவாக்கம் மையத்திற்கு உடனுக்குடன் அனுப்பி வைக்குமாறு வேளாண் அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, தஞ்சாவூர் மாவட்ட விதை சான்று மற்றும் உயிர்ம சான்று உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், கும்பகோணம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) தேவிகலாவதி. விதை சான்று அலுவலர்கள் கும்பகோணம் அரவிந்த் மற்றும் பாபநாசம் காயத்ரி, பண்ணை மேலாளர் அன்பரசு, விதை உதவி அலுவலர்கள் தியாகராஜன், பிரியா மற்றும் உதவி வேளாண் அலுவலர் மலைச்சாமி, உதவி பொறியாளர் அழகுவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post சாக்கோட்டை, மருதாநல்லூர் அரசு விதை பண்ணைகளில் சென்னை உயிர்மச்சான்று இணை இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.