சவுக்கு தோப்பில் வைத்து 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 2 வாலிபர்கள் கைது

4 hours ago 1

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 16 வயது சிறுமி கீழத்தோட்டம் கிராமத்தில் உள்ள தனது தோழியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் அரவிந்த் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணிடம் பேசிய அரவிந்த், தனிமையில் சந்திக்க சிறுமியை அழைத்துள்ளார். அதை நம்பி அரவிந்தை சந்திப்பதற்காக ராஜாமடம் சவுக்கு தோப்பு பகுதிக்கு சிறுமி தனியாக சென்றுள்ளார். அங்கு வைத்து அத்துமீறியதுடன் சிறுமியை, அரவிந்த் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் மட்டுமல்லாது அவருடன் வந்த அரவிந்தின் நண்பனும், கீழத்தோட்டம் பகுதியை சேர்ந்த சக்திவேலின் மகனுமான சரண் என்பவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதனால் அந்த சிறுமி கதறி அழுத நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்தவுடன் இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா தலைமையிலான போலீசார், தப்பியோடிய அரவிந்த் மற்றும் சரண் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article