சல்மான் கானின் "சிக்கந்தர்" படத்தின் ஓடிடி ரிலீஸ்

4 hours ago 2

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.

'சிக்கந்தர்' படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.190 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் இன்று நள்ளிரவு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Read Entire Article