
சென்னை,
தங்கம் விலை கடந்த ஏப்ரல் 22-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனையானது.
இதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக உயர்ந்தது. அன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.72,800-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று சவரனுக்கு அதிரடியாக ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.72,120-க்கும், கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.72,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 7 நாள் தங்கம் விலை நிலவரம்:
10-05-2025- ஒரு சவரன் (22 கேரட்) ரூ.72,360 ஒரு கிராம் ரூ.9,045
09-05-2025- ஒரு சவரன் (22 கேரட்) ரூ.72,120; ஒரு கிராம் ரூ.9,015
08-05-2025- ஒரு சவரன் (22 கேரட்) ரூ.73,040 ; ஒரு கிராம் ரூ.9,130
07-05-2025- ஒரு சவரன் (22 கேரட்) ரூ.72,600
06-05-2025- ஒரு சவரன் (22 கேரட்) ரூ.72,800
05-05-2025- ஒரு சவரன் (22 கேரட்) ரூ.71,200
04-05-2025- ஒரு சவரன் (22 கேரட்) ரூ.70,040
கடைசி 7 நாள் வெள்ளி விலை நிலவரம்:
10-05-2025- ஒரு கிராம் ரூ.110
09-05-2025- ஒரு கிராம் ரூ.110
08-05-2025- ஒரு கிராம் ரூ.110
07-05-2025- ஒரு கிராம் ரூ.111
06-05-2025- ஒரு கிராம் ரூ.111
05-05-2025- ஒரு கிராம் ரூ.108
04-05-2025- ஒரு கிராம் ரூ.108