சர்வதேச விண்வெளி மைய வட்டப்பாதைக்குள் நுழைந்த விண்கலம்

1 week ago 3

வாஷிங்டன்,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் உள்ளது. வருகிற 2027-ம் ஆண்டில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.அவர்களுக்காக சிறப்பு பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் முன்னோட்டமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு இந்திய வீரரை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்த இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சி குழுவுடன் செல்ல இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லாவை தேர்வு செய்தது. இதன்படி, நேற்று இந்திய நேரப்படி பகல் 12.01 மணிக்கு ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட் மூலம் சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் புறப்பட்டார். அவருடன் மேலும் 3 விண்வெளி வீரர்களும் சென்றனர்.

இந்த விண்கலன் இன்று மாலை 4.30 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது சர்வதேச விண்வெளி மைய வட்டப்பாதையில் விண்கலன் நுழைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்கலன் மணிக்கு 26,447 கி.மீ. வேகத்தில் பயணம் மேற்கொண்டு வருகிறது.

Read Entire Article