சர்வதேச ரேபிட் செஸ்: 'சாம்பியன்' பட்டம் வென்றார் குகேஷ்

8 hours ago 3

ஜாக்ரெப்,

இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ரேபிட் பிரிவில் 9-வது மற்றும் கடைசி சுற்றில் சென்னையை சேர்ந்த 19 வயது குகேஷ், அமெரிக்காவின் வெஸ்லி சோவை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் குகேஷ் 36-வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். 9-வது சுற்று முடிவில் குகேஷ் 14 புள்ளிகள் பெற்று (6 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

போலந்து வீரர் ஜான் கிர்சிஸ்டோப் டுடா (11 புள்ளி) 2-வது இடமும், முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (10 புள்ளி) 3-வது இடமும் பிடித்தனர். இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பாபியனோ கருனாவுடன் (இருவரும் தலா 9 புள்ளி) இணைந்து 4-வது இடம் பெற்றார். இதைத்தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவு போட்டி நடக்கிறது.

Read Entire Article