பாகிஸ்தானில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

3 hours ago 2

இஸ்இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள முகமந்த் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதை தொடர்ந்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே வேளையில் 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். மற்றொரு சம்பவமாக கைபர் பக்துங்வா மாகாணத்தின் இஸ்மாயில் கான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

Read Entire Article