
லக்னோ,
உத்தர பிரதேசம் மாநிலம் சீதாப்பூரில் ரத்தன்கஞ்ன் கிராமம் உள்ளது. இதனருகே சாரதா ஆறு பாய்ந்தோடுகிறது. ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது 22 வயது வாலிபர் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக அதே ஆற்றில் வாலிபரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் பரிசல் படகுகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிக பாரம் காரணமாக பரிசல் நடு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 வயது குழந்தை உள்பட நீரில் மூழ்கி தத்தளித்த 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.