கல்லே: ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 4வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். தனது 35வது பிறந்தநாளின்போது மிட்சல் ஸ்டார்க் இந்த சாதனையை செய்திருக்கிறார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கல்லே நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னேவை ஆட்டமிழக்கச் செய்தபோது மிட்செல் ஸ்டார்க் இந்த சாதனையை படைத்தார். ஸ்டார்க்கின் மொத்த விக்கெட்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் 377 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 244 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 79 விக்கெட்டுகளும் அடங்கும்.
இந்தச் சாதனை மூலம், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஷேன் வார்ன் (1001), கிளென் மெக்ராத் (949), மற்றும் பிரெட் லீ (718) ஆகியோருக்குப் பின் 4வதாக ஸ்டார்க் இடம் பெற்றுள்ளார். ஷேன் வார்னே சுழற் பந்துவீச்சாளர் என்ற வகையில், அவரை விடுத்தது கிளென் மெக்ராத் மற்றும் பிரெட் லீக்கு அடுத்து, இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் வீரர்களில், 700 விக்கெட்டுகளைக் கடந்த 2வது வீரர் என்ற பெருமையையும் ஸ்டார்க் பெற்றுள்ளார்.
ஷகிப் அல் ஹசன் ஏற்கனவே இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா 597 விக்கெட்டுகளுடன் ஸ்டார்க்கிற்கு அடுத்த இடத்தில் உள்ளார். 700 விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஸ்டார்க் 6வது இடத்தில் உள்ளார். வெறும் 373 இன்னிங்ஸ்களில் அவர் இந்தச் சாதனையை செய்து இருக்கிறார்.
The post சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்: ஆஸி. வீரர் மிட்சல் ஸ்டார்க் சாதனை appeared first on Dinakaran.