சர்வதேச கிரிக்கெட்: மோசமான சாதனையில் சச்சின், ரோகித் சர்மாவை சமன் செய்த பும்ரா

14 hours ago 1

லீட்ஸ்,

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் (137 ரன்கள்), ரிஷப் பண்ட் (118 ரன்கள்) ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 96 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு, பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராவ்லி 12 ரன்னுடனும், பென் டக்கெட் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி தற்போது வரை விக்கெட் இழப்பின்றி பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக இந்த போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ஜஸ்பிரித் பும்ரா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா இதுவரை 34 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆகிய இந்திய வீரர்களின் மோசமான சாதனை பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த சச்சின் மற்றும் ரோகித் சர்மாவை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் ஜாகீர் கான் முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:

1. ஜாகீர் கான் - 43 முறை

2. இஷாந்த சர்மா - 40 முறை

3. விராட் கோலி - 38 முறை

4. ஹர்பஜன் சிங் - 37 முறை

5. அனில் கும்ப்ளே - 35 முறை

6. பும்ரா/ரோகித் சர்மா/சச்சின் - 34 முறை 

Read Entire Article