சர்வதேச கிரிக்கெட்: 64 வயதில் அறிமுகம் ஆன வீராங்கனை

1 week ago 3

துபாய்,

போர்ச்சுக்கல் - நார்வே இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் போர்ச்சுக்கல் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் போர்ச்சுக்கல் அணியில் ஜோனா சைல்ட் அறிமுக வீராங்கனையாக களமிறங்கினார். அவருக்கு வயது 64 ஆண்டுகள் 181 நாட்கள். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வயதில் அறிமுகம் ஆன 2-வது வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த தொடரில் பெரிய அளவில் அசத்தாத ஆல் ரவுண்டர் ஜோனா சைல்ட் பேட்டிங்கில் வெறும் 2 ரன்களும், பந்து வீச்சில் பெரிய அளவில் வாய்ப்பும் பெறவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த சாதனை பட்டியலில் ஜிப்ரால்டரைச் சேர்ந்த சாலி பார்டன் 66 வயதில், (66 ஆண்டுகள் மற்றும் 334 நாட்கள்) அறிமுகம் ஆகி முதலிடத்தில் உள்ளார். 

Read Entire Article