சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ஜடேஜா?

7 hours ago 1

துபாய்,

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அவர் தனது பந்துவீச்சை வீசி முடித்த பிறகு நடந்த ஒரு சம்பவம் காரணமாக ரசிகர்கள் அவர் இந்த போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப் போவதாக கூறி வருகின்றனர்.

இன்றைய இறுதிப்போட்டியில் ஜடேஜா தனது பத்து ஓவர்களையும் வீசி முடித்தபோது, விராட் கோலி அவரது அருகே சென்று கட்டி அணைத்தார். ஜடேஜா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதால் தான் விராட் கோலி அவரை அணைத்து அவருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் கூறப்படுகிறது.

விராட் கோலி ஜடேஜாவை கட்டி அணைத்தது நெகிழ வைக்கும் சம்பவமாக ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டடு வருகிறது. இது ஓய்வு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜடேஜா செய்த சாதனைகள் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

முன்னதாக, அஸ்வின், ஸ்டீவ் ஸ்மித் தனது ஓய்வு முடிவை பொதுவெளியில் அறிவிப்பதற்கு முன்பு அவரை கோலி கட்டி அணைத்ததை குறிப்பிட்டும், தற்போது ஜடேஜாவை கோலி அணைத்ததையும் சுட்டிக்காட்டி ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

 

Read Entire Article