முட்டுக்காடு: முட்டுக்காட்டில் நடைபெற்ற சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குழந்தைகளுடன் உரையாடினார். சென்னை அருகே முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் ஆட்டிசம் குறைபாடு விழிப்புணர்வு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி அந்த நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இயக்குநர் நச்சிகேதா ரவுட் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் கல்வி கற்கும் முறை குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், கணினி வரைகலை ஆகியவற்றை பார்வையிட்டு பாராட்டினார்.