'சர்தார்2' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

1 day ago 6

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி.

இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதலில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மதியம் 12.45 மணிக்கு இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாக உள்ளநிலையில், தற்போது பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

Agent returns to the ultimate combat. Presenting the First Look of #Sardar2. Prologue from 12.45PM today. @Karthi_Offl @Prince_Pictures @ivyofficial2023 @Psmithran @iam_SJSuryah @lakku76 @venkatavmedia @RajaS_official @B4UMotionPics @MalavikaM_ @AshikaRanganathpic.twitter.com/4AY9lcGIk1

— Prince Pictures (@Prince_Pictures) March 31, 2025
Read Entire Article