சர்க்கி தாத்ரி என்ற இடத்தில் கார் மோதிய விபத்தில் மனு பாக்கரின் பாட்டி, மாமா உயிரிழப்பு

3 hours ago 2

ஹரியானா: சர்க்கி தாத்ரி என்ற இடத்தில் கார் மோதிய விபத்தில் மனு பாக்கரின் பாட்டி, மாமா ஆகியோர் உயிரிழந்தனர். ஸ்கூட்டரில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் மனு பாக்கரின் பாட்டி, மாமா சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் கேல் ரத்னா விருதைப் பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். மனு பாக்கரின் தாய்வழி பாட்டி சாவித்ரி தேவி (70) மற்றும் தாய்வழி மாமா யுத்வீர் சிங்(50) ஹரியானாவின் மகேந்திரகரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

ஹரியானாவில் உள்ள மகேந்திரகர் பைபாஸ் சாலையில் பிரெஸ்ஸா கார் ஒன்று ஸ்கூட்டரின் மீது பலமாக மோதியுள்ளது. விபத்துக்குப் பிறகு காரும் கவிழ்ந்தது. காரை ஓட்டிச் சென்றவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனு பாக்கரின் தாய்வழி பாட்டி சாவித்ரி தேவி ஒரு வீராங்கனை ஆவார். தேசிய அளவிலும் பதக்கங்களை வென்றுள்ளார்.

The post சர்க்கி தாத்ரி என்ற இடத்தில் கார் மோதிய விபத்தில் மனு பாக்கரின் பாட்டி, மாமா உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article