சர்க்கரை நோயின் பக்க விளைவுகள்.. இந்த உறுப்புகளை பாதித்தால் உயிருக்கே ஆபத்து

2 months ago 13

நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு அதிகமாகும்போது உண்டாகும் பக்கவிளைவுகளினால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. ரத்த சர்க்கரை அதிகமாகும்போது ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகிறது. நீரிழிவு நோயாளிகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது.

1 . இருதய பாதிப்பு

ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உயர்ரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு, தமனிதடிப்பு (அத்திரோஸ்கிளிரோசிஸ்), மாரடைப்பு, இதய தசைநோய் (கார்டியோமையோபதி), இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பக்க விளைவுகள் ஏற்படும்.

2. சிறுநீரக பாதிப்பு

ரத்த சர்க்கரை அதிகமாகும்போது சிறுநீரகத்தின் ரத்த நாளங்கள், சிறுநீரகத்தின் நெப்ரான்கள் பாதிப்படைந்து ஒருகட்டத்தில் சிறுநீரகம் செயலிழக்கும். இவ்வாறு ஏற்படும்போது டயாலிசிஸ் அல்லது சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை செய்யாவிடில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

3.டயாபட்டிக் கீட்டோஅசிடோசிஸ்

நீரிழிவு நோயில் இன்சுலின் பற்றாக்குறையால் குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற முடியாத நிலையில் கொழுப்புசத்து உடைந்து சக்திக்கு மூலாதாரமாக பயன்படுத்தப்படுகிறது. அப்போது ரத்தத்தில் கீட்டோன்கள் அதிகமாவதால் சிறுநீரகம் மற்றும் உறுப்பு செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

4. நரம்பு பாதிப்பு

ரத்த சர்க்கரை அதிகமாகும்போது ஏற்படும் நரம்பு பாதிப்பால் உணர்திறன் குறைந்து, புண் ஏற்படும்போது, வெகுநாட்கள் ஆறாமல் இருக்கும் நிலையில் தொற்று பாதிப்பால், இழையஅழுகல் (கேங்ரியின்) ஏற்பட்டு ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்படுத்தி (செப்ஸிஸ்) உயிருக்கு ஆபத்து உண்டாக்கலாம்.

5. மூளை பாதிப்பு

ரத்த சர்க்கரை அதிகமாகும்போது மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டோ, அல்லது நாளங்கள் சுருங்கி தடிமனமாகிவிடுவதால், ரத்த ஓட்டம் குறைந்தோ, பக்கவாதம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

 

Read Entire Article