
மும்பை.
போர் பதற்றம் காரணமாக கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை நேற்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, சீனா இடையேயான பரஸ்பர வரி விதிப்பு குறைப்பும் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்திற்கு வழிவகுத்தது. ஆனால், இந்திய பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்தது.
அதன்படி, 346 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 578 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 442 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 940 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
291 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 206 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 281 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 148 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 551 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 581 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 39 புள்ளிகள் ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 577 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துளனர்.