சரியான இடத்தில் கேட்டால் கையில் நிறைய வைத்து இருப்பவர்கள் கொடுப்பார்கள்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில்

1 month ago 6

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் (திமுக) பேசுகையில், கடலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுமா என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் “என் துறையில் இல்லாத அதிகாரமோ, இல்லை திட்டமோ என்னால் செயல்படுத்த முடியாது என்பதனால் உறுப்பினரிடம் நான் கூற வேண்டியது அவருடைய கோரிக்கை நியாயமான கோரிக்கை. அனுதாபம் எனக்கு இருக்கிறது.

ஆனால் எந்தத் துறையால் இதை செயல்படுத்த முடியுமோ அந்தத் துறையில் அவர் கோரிக்கை வைத்தால், வேளாண்மைத் துறை அமைச்சரும் கேட்டிருக்கிறார், அவர் மாவட்டத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று கேட்டிருக்கிறார். தொழில் துறை அமைச்சர் எல்லாம் செய்து கொடுப்பார். எனவே சரியான இடத்தில் கையில் நிறைய வைத்து இருப்பவர்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.

The post சரியான இடத்தில் கேட்டால் கையில் நிறைய வைத்து இருப்பவர்கள் கொடுப்பார்கள்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article