
அமராவதி,
ஆந்திர பிரதேசம் காக்கிநாடா மாவட்த்தை சேர்ந்தவர் சந்திர கிஷோர், அவரது மனைவி ராணி, இவர்களுக்கு இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரின் கல்வித் திறன் குறைவாக இருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த கிஷோர் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால் இந்த போட்டிகள் நிறைந்த உலகில் எப்படி போராடுவார்கள் என பயந்தார்.
இந்த எண்ணம் அவரை ஆத்திரம் அடைய செய்தது. இதனால் கிஷோர் தனது இரண்டு மகன்களையும் தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்துக் கொலை செய்தார், பின்னர் கிஷோரும் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்திகு சென்ற போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.