சரக்கு கிடங்கு கழகத்தில் 185 மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்

9 hours ago 2

மத்திய சரக்கு கிடங்கு கழகத்தில் (Warehousing Corporation) 185 மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணி விவரம்:

1. Management Trainee (General): 40 இடங்கள் (பொது-19, ஒபிசி-11, பொருளாதார பிற்பட்டோர்-4, எஸ்சி-3, எஸ்டி-3). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.60,000- 1,80,000. தகுதி: Business Administration/Human Resource/Industrial Relation/Marketing Management/Supply Chain Management பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Management Trainee (Technical): 13 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.60,000- 1,80,000. தகுதி: Agriculture/Microbiology/Bio-chemistry/Zoology ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் Entomology ஐ ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
3. Accountant: 9 இடங்கள் (பொது-1, ஒபிசி-2, எஸ்சி-4, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.40,000- 1,40,000. தகுதி: சிஏ படித்திருக்க வேண்டும் அல்லது வணிகவியல்/அக்கவுன்டன்சி/காஸ்ட் மற்றும் வொர்க்ஸ் அக்கவுன்ட்ஸ் பிரிவில் பட்டப்படிப்பை முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Superintendent (General): 22 இடங்கள் (பொது-13, எஸ்சி-3, எஸ்டி-2, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Junior Technical Assistant: 81 இடங்கள் (பொது-33, எஸ்சி-17, எஸ்டி-5, ஒபிசி-18, பொருளாதார பிற்பட்டோர்-8). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.29,000-93,000. தகுதி: Agriculture/Zoology/Chemistry/Bio-chemistry பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர் ஆகிய மையங்களில் நடைபெறும்.

கட்டணம்: பொது, ஒபிசியினர் மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1350/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ500/-.www.cewacor.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.01.2025.

 

The post சரக்கு கிடங்கு கழகத்தில் 185 மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article