
மும்பை,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பிம்ரி சின்சவத் பகுதியை சேர்ந்த இளைஞர் தேஜா பஜிராவ் (வயது 20). இவர் ஹிஜ்வாடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆபிஸ் பாய் ( office boy) ஆக பணியாற்றி வந்தார்.
இதனிடையே, தேஜா பஜிராவிடம் உன் சம்பளம் எவ்வளவு என கேட்டு உறவினர்கள் அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளனர். குறிப்பாக, உறவினர்களான நீலீஷ் சஞ்சய் (வயது 25), அவரது சகோதரர் மங்கேஷ் (வயது 23) ஆகிய இருவரும் சம்பளம் எவ்வளவு என கேட்டு தேஜாவை அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பளம் தொடர்பாக உறவினர்களின் கேள்வி மற்றொரு தொல்லையால் விரக்தியடைந்த தேஜா பஜிராவ் கடந்த சில நாட்களுக்குமுன் தான் பணியாற்றும் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்வதற்குமுன் தன் தற்கொலைக்கு காரணம் சஞ்சய், மங்கேஷ் என்று கூறி வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக சஞ்சய், மங்கேசை இன்று கைது செய்தனர்.