வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு

3 hours ago 2

புதுடெல்லி,

வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததால், சட்ட வடிவம் பெற்று விட்டது. இதற்கிடையே, வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்தநிலையில், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும் மக்களவை கொறடாவுமாகிய ஆ.ராசா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் வகையிலும், அதற்கு எதிராகவும் உள்ள வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக இதுவரை 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article