சம்பலுக்கு செல்ல எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களுக்கு உ.பி. அரசு தடை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

1 month ago 12

சென்னை: எஸ்டிபிஐ கட்சி தேசிய துணைத் தலைவர் ஷர்புதீன் அஹமது நேற்று வெளியிட்ட அறிக்கை: உத்தரபிரதேச காவல்துறையால் 6 முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பல் நகருக்கு வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை தடுத்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். பத்திரிகையாளர்கள் துயர நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதை தடுக்கிறார்கள். உ.பி. அரசின் ஜனநாயகமற்ற மற்றும் சர்வாதிகாரத்தனமான இந்த செயல், தலைவர்களின் அரசியல் சாசன உரிமையை முற்றிலும் மறுப்பதாகும்.

The post சம்பலுக்கு செல்ல எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களுக்கு உ.பி. அரசு தடை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article