புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் நேற்று பேட்டியளிக்கையில், புதிய வரி விதிப்பு முறை வரி செலுத்துவோருக்கான எளிய கணக்கீடுகளைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்ற அறிவிப்பு, வரி அடுக்குகள் சீரமைப்பு ஆகியவை 90 % பேரை புதிய வரிமுறைக்கு மாற தூண்டும் விதத்தில் உள்ளன’’ என்றார்.
The post ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு 90% பேரை புதிய வரிமுறைக்கு மாற தூண்டும்: நேரடி வரிகள் வாரிய தலைவர் பேட்டி appeared first on Dinakaran.