கர்னூல்: சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஒரு காலத்தில் கிராமங்களுக்கு செய்திதாள்கள் கூட வருவது கடினம். ரேடியோ மூலமாக மட்டுமே நாம் செய்திகளை அறிய முடிந்தது. யார், யார் சட்டப்பேரவைகளில் நன்றாக பேசினார்களோ அவர்களை தங்கள் அரசியல் தலைவர்களாக மக்கள் ஏற்று கொண்டு அவர்களை தேர்தல்களில் வெற்றி பெற செய்தனர். அதன் பின்னர், தொலைக்காட்சி வந்தது. தற்போது நூற்றுக்கணக்கான சேனல்கள் வந்து விட்டது. இது மாபெரும் மாற்றம்.