சமூக நல்லிணக்கத்திற்கு வழிபாட்டுத் தலம் சிறப்புச்சட்டம் அவசியம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது காங்கிரஸ்

1 month ago 8

டெல்லி: நாட்டின் அனைத்து சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கம் நிகழ வழிபாட்டு தளங்கள் சிறப்புச்சட்டம் அவசியம் என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. 1991 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டு தளங்கள் சிறப்புச்சட்டத்தின்படி இந்தியா சுதந்திரம் அடைந்த போது இருந்த மத ஸ்தலங்களின் கட்டமைப்பு தன்மையை மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வழிபாட்டு தலத்தில் மற்றொரு வழிபாட்டு தளம் இருப்பதாக கூறி யாரும் உரிமை கோரா முடியாது.

இந்த சட்டத்தை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்தியாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடி ஆனதா என்பது குறித்து மனுவில் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால் வழிபாட்டு தளங்கள் சிறப்பு சட்டத்திற்கு ஆதரவாகவும் அதனை அமல் படுத்த கோரியும் ஜாமித் ஓலமா ஹாஹிஎன்ட் ஏய்.எம்.ஐ.எம் தலைவர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி உள்ளிட்ட சில மசூதிகள் ஏற்கனவே இருந்த கோவில் மீது கட்டப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்குகளில் அங்கு ஆய்வுகளை மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் செல்லுபடி தன்மை குறித்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு வழிபாட்டு தலங்கள் திறப்பு சட்டம் தற்போது வரை செல்லுபடியாகும் என தெரிவித்தனர். இத வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவு காணும் வரை வேறு எந்த நீதிமன்றங்களும் வழிபாட்டு தலங்கள் தொடர்பாக எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க 4 வாரமும் அதன் மீது பிற தரப்பினர் பதிலளிக்க மேலும் 4 வார கால அவகாசமும் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனு மனுவில் இந்தியாவில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டம் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மாற்றம் செய்யப்பட்டால் சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன். நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பாஜக வழக்கறிஞர் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

The post சமூக நல்லிணக்கத்திற்கு வழிபாட்டுத் தலம் சிறப்புச்சட்டம் அவசியம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது காங்கிரஸ் appeared first on Dinakaran.

Read Entire Article