*புதிதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை
முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சி குமாரபுரம் கிராமத்தில் எடையூர் – திருப்பத்தூர் சாலையில் பயணிகள் நிழற்குடை கட்டிடம் ஒன்று உள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பக்கிரிசாமி நிதி பரிந்துரையில் கட்டப்பட்ட இந்த நிழற்குடை கட்டிடத்திற்கு வந்துதான் குமாரபுரம் மக்கள் மட்டுமின்றி சுற்று பகுதி கிராம மக்கள் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஒருபுறம் எடையூர், திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிக்கு மறுபுறம் திருப்பத்தூர் திருத்துறைப்பூண்டி கோட்டூர் மன்னார்குடி போன்ற பகுதியில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் இந்த பயணிகள் நிழற்கட்டிடம் பயனடைந்து வந்தது. இந்தநிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது பயணிகள் நிழற்கட்டிடத்தின் மேல் சிலாப் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் அளவில் பழுதடைந்துள்ளது. கட்டிட சுவர்களும் சேதமாகி காணப்படுகிறது.
மேலும் உள்ளே மக்கள் அமரும் இடமும் அசுத்தமாக உள்ளது இதனால் மக்கள் இங்கு கடமைக்கு நின்று பேரூந்து ஏறிவருகின்றனர் அப்பகுதியை சேர்ந்த சிலர் தாங்கள் வளர்க்கும் மாடுகளை இரவு மற்றும் பகல் நேரத்தில் இங்கு கட்டி தங்க வைத்து வருகின்றனர் இதனால் இந்த பயணிகள் நிழற்கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனாலும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் அதிகாரிகளும் முன்வராத நிலையில் அந்த கட்டிடம் அதே நிலையில் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனால் அதனால் பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து இந்த பழுதடைந்த இந்த பயணிகள் நிழற்கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
The post எடையூர் குமாரபுரம் கிராமத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை appeared first on Dinakaran.