சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பிரேமலதா வலியுறுத்தல்

2 weeks ago 3

சென்னை: கனிமவள கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றி விசாரணை செய்ய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரை சேர்ந்த ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்த குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனம் மீது 407 மினி லாரி மோதிய விபத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலரும் சட்டவிரோத கல் குவாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய நபரான ஜெகபர் அலி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார்.

Read Entire Article