சமூக ஆர்வலர் கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

2 months ago 10

புதுக்கோட்டையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி. சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக போராடி வந்தார். போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள், அவரை லாரி ஏற்றி கொலை செய்தனர். இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ராமையா, ராசு, தினேஷ்குமார், முருகானந்தம், காசிநாதன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 நபர்கள் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இதன்படி சிறையில் உள்ள குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரிந்துரை அளித்திருந்த நிலையில், மாவட்ட கலெக்டர் அருணா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

Read Entire Article