
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா.
சமீபத்தில் பாலிவுட்டிலும் அறிமுகமானார். இந்நிலையில் நடிகை சமந்தா இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தசூழலில் அவர் நடிக்க மறுத்த 7 படங்களை தற்போது காண்போம்.
கடல்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் 'கடல்'. கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தில் துளசி நாயர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இருப்பினும் இதில் கதாநாயகியாக நடிக்க முதலில் சமந்தாவை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், சமந்தா அந்த படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.
யுவடு
வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் 'யுவடு'. இதில், ராம் சரண், சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இருப்பினும் இதில் முதலில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருந்தார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் படத்திலிருந்து வெளியேறினார்.
புரூஸ் லீ-தி பைட்டர்
ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'புரூஸ் லீ-தி பைட்டர்'. ராம் சரண் , ரகுல் பிரீத் சிங் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சமந்தா முதல் தேர்வாக இருந்தார். இருப்பினும், தேதி சிக்கல்கள் காரணமாக அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
என்.டி.ஆர் கதைநாயகுடு
கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'என்.டி.ஆர் கதைநாயகுடு'. என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் சமந்தா நடிக்க மறுத்திருக்கிறார்.
ஐ
சங்கர் இயக்கத்தில் விக்ரம் , எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'ஐ'. இப்படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்திருக்கிறார்.
புஷ்பா: தி ரைஸ்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'புஷ்பா: தி ரைஸ்'. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர்களில் சமந்தாவும் ஒருவர் ஆவார்.
தசரா
நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் 'தசாரா'. இப்படமும் சமந்தா நிராகரித்த படங்களில் ஒன்றாகும்.