சமத்துவ நெறியைப் போற்றுவோம்: வள்ளலார் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

6 months ago 38

சென்னை,

அருட்பிரகாச வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு முதலாக, "தனிப்பெருங்கருணை நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் இன்று! "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!"

"மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!" என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்! வாழ்க வள்ளலார்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, "#தனிப்பெருங்கருணை_நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று!

"உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!"
"மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!" என அவர் காட்டிய சமரச சுத்த வழியை… pic.twitter.com/yPhNg4RwLd

— M.K.Stalin (@mkstalin) October 5, 2024


Read Entire Article