சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: 3 மணிநேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்

2 hours ago 1

கேரளா:  சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 3 மணிநேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திகை முதல் நாளன்று மாலையிட்ட பக்தர்களின் வருகை என்பது சபரிமலையின் முக்கிய நிகழ்வு 12 விளக்கு என்பர். 12 விளக்குகளுக்கு பிறகு பக்தர்களின் வருகை என்பது அதிகரித்து காணப்படும்.

இந்த காரணத்தை கருத்தில் கொண்டு சபரிமலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் அதிகாலை நடை திறந்த பின்பு மக்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பெரிய நடைப்பந்தல் அமைந்திருக்கக்கூடிய பகுதி, சிறிய நடைப்பந்தல் அமைந்திருக்கக்கூடிய பகுதிகளில் மக்கள் நிறைந்து காணப்படக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 18ஆம் படிவழியாக பக்தர்களை அதிகளவில் ஏற்றி அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நிமிடத்திற்கு 80 பேருக்கு மேல் அனுப்பினால் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் விரைவாக செய்யமுடியும் என்ற காரணத்தினால் இன்று காலை அத்தகைய பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இன்றைய காலை நிலவரப்படி இன்று அதிகாலை நடை திறந்த பிறகு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். எதிர்வரக்கூடிய 12 விளக்குகளுக்கு பிறகு வரக்கூடிய பக்தர்களின் விளக்கு என்பது அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் அதற்கு ஏற்றவகையில் தற்போது சபரி மலையில் பல்வேறு நடவடிக்கைகளை தேவஸ்தானம் அதிகாரிகளும், காவல்துறையினரும், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் எடுத்து வருகின்றனர்.

 

The post சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: 3 மணிநேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article