சபரிமலையில் 2024-2025-ம் ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜை: பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

1 month ago 8

கேரளா: சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. நாள் தோறும் 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலையில் கடந்த ஆண்டு மகர விளக்கு பூஜையின் போது கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்கள். இதனை சரி செய்யும் விதமாக நடப்பாண்டு கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கான மகர விளக்கு பூஜை காலத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சபரிமலை மகர விளக்கு பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பம்பை, நிலக்கல் மற்றும் எரிமேலி ஆகிய பகுதிகளில் உள்ள தேவசம் போர்டுக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக முன்பதிவு செய்ய அனுமதிப்பது குறித்தும் மாநில அரசு தேவசம் போர்டுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே 2024-2025 ஆம் ஆண்டுக்கான சபரிமலை மேல் சாந்தியாக கொல்லம் பகுதியை சேர்ந்த அருண்குமார் நம்பூதிரி என்பவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

The post சபரிமலையில் 2024-2025-ம் ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜை: பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article