சபரிமலை வளர்ச்சிப் பணிகளுக்காக தனி அமைப்பு: சட்டசபையில் தேவசம் போர்டு அமைச்சர் தகவல்

3 months ago 11


திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நேற்று அவர் கூறியது: சபரிமலையுடன் தொடர்புடைய அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் கண்காணிக்கவும், விழாக்கால பணிகளை ஒருங்கிணைக்கவும் சபரிமலை வளர்ச்சி நிறுவனம் என்ற பெயரில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஒரு புதிய அமைப்பை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்தின்படி ரோப் கார் அமைக்கும் பணிகள் மற்றும் இதை நிர்வகிப்பதற்காக ஒரு தனியார் நிறுவனத்துடன் வருவாய் பங்கீடு அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை மாஸ்டர் பிளானுக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. சன்னிதானத்தை 8 மண்டலங்களாக பிரித்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மகரஜோதி தரிசனத்திற்காகவும், நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் 2 திறந்தவெளி அரங்கங்கள் அமைக்கப்படும். நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பக்தர்கள் பக்தர்கள் வருவதற்கும், செல்வதற்கும் கூடுதல் வழிகள் ஏற்படுத்தப்படும். சன்னிதான வளர்ச்சிப் பணிகளுக்காக 2039ம் ஆண்டு வரை உள்ள 3 கட்டப் பணிகளுக்காக ரூ778.17 கோடி ஒதுக்கப்படும். வனப்பாதையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். 2025-2030ல் பம்பை கணபதி கோயில் முதல் ஹில்டாப் வரை பம்பை நதியின் குறுக்கே பாலம் அமைக்கப்படும் என்றார்.

The post சபரிமலை வளர்ச்சிப் பணிகளுக்காக தனி அமைப்பு: சட்டசபையில் தேவசம் போர்டு அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article