சபரிமலை பக்தர்களின் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது ஆந்திர பக்தர்கள் ஏழு பேர் காயம்

1 month ago 6

பெரியகுளம்: சபரிமலை சென்று திரும்பிய கார் பெரியகுளம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 7 பேர் காயமடைந்தனர்.ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை ஐயப்ப பக்தர்கள் 7 பேர், சபரிமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று பிற்பகல், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திண்டுக்கல் – தேனி நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியது.

மோதிய வேகத்தில் சாலையோர பள்ளத்தில் கார் உருண்டு விழுந்து நொறுங்கியது. இதில் வாகனத்தை ஓட்டிய பிரசன்குமார் ரெட்டி, அஸ்வின், ராஜா, பவன்குமார், ஐசட்டி, விஷ்ணுவர்தன் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 7 பேரும் காயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சபரிமலை பக்தர்களின் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது ஆந்திர பக்தர்கள் ஏழு பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article