சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

2 months ago 14

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, அவரது மகன் பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும், மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

இதில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி தொடங்குவதையொட்டி முந்தைய நாள் (15-ந் தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

 

Read Entire Article