சென்னை,
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது மசாக்கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஹாஸ்யா மூவிஸ் தயாரிக்கும் இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இத்தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் வரும் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக "தில்ருபா" படத்தில் நடித்துள்ள கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
இது ஹாஸ்யா மூவிஸ் நிறுவனத்தின் 7-வது மற்றும் கிரண் அப்பாவரமின் 11-வது படமுமாகும். இன்று இப்படத்தின் தலைப்பு வெளியாக உள்ளது.