தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் அடுத்த பட அப்டேட்

3 hours ago 1

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியான "பத்து தல" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இவர் அடுத்தாக, 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பற்றி பேசும் படமாக உருவாக உள்ளது. அதனை தொடர்ந்து 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் 49' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும், நடிகர் சிம்பு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அப்டேட் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மதியம் 12.12 மணியளவில் வெளியாக உள்ளது. இது சிம்புவின் 50-வது படமாகும். இது குறித்த பதிவை சிம்பு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

pic.twitter.com/lw9rfw9QrY

— Ātman Cine Arts (@Atman_cinearts) February 3, 2025
Read Entire Article