மும்பை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடர் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சருக்கு கெரியரில் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் பந்துவீச்சில் மொத்தம் 14 சிக்சர்களை வாரி வழங்கினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் வழங்கிய 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஆர்ச்சர் படைத்துள்ளார்.
இதில் தென் ஆப்பிரிக்காவின் நிகிடி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு தொடரில் 16 சிக்சர்கள் வழங்கி முதலிடத்தில் உள்ளார்.