'சந்திரயான்-4' 2027-ல் ஏவப்படும் : மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

2 hours ago 1

புதுடெல்லி,

சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான் -4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக இறங்கியுள்ளது. நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே சந்திரயான் -4 ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த சந்திரயான்-4 பணியானது, நிலவில் ஒரு இந்தியர் தரையிறங்குவதற்கான அடிப்படை தொழில்நுட்ப திறன்களை அடைவது. பின் இது பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும். இத்துடன் சந்திரயான் பாலோ-ஆன் பணிகள் தொடர்புடைய விண்வெளி போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு திறன்களை மேம்படுத்துதல் உட்பட பல விஷயங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. 2040-ல் நிலவில் மனிதர்களை தரையிறக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை நோக்கிய அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது.

சந்திரயான் -4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் கருவிகள் இரண்டு தொகுப்புகளாக, எல்.எம்.வி-3 மற்றும் பி.எஸ்.எல்.வி ஆகிய இரண்டு ராக்கெட்டுகள் மூலம் தனித்தனியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளன. விண்வெளித்துறையில் இந்தியா சாதிக்கும் இந்த தருணத்தை ஒட்டுமொத்த தேசமும் எதிபார்த்துக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், சந்திரயான் -4 திட்டம் வரும் 2027-ல் விண்ணில் செலுத்தப்படும் என்று ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். 2026-ல் சமுத்ராயன் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் இந்த திட்டத்தின் மூலம் கடலுக்கு அடியில் 6 ஆயிரம் அடி மூன்று விஞ்ஞானிகள் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article