சந்தான வேணுகோபாலசாமி கோயிலில் சேஷ வாகனத்தில் சாமி வீதியுலா

6 hours ago 2

திருத்தணி, மே 16: திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலாக விளங்கும் எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் சிறப்பு பெற்ற சந்தான வேணுகோபாலசாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரமோற்சவ விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெற்று வரும் விழாவில், மூலவர் சந்தான வேணுகோபால சாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவர் வாகன சேவைகளில் எழுந்தருளி கிராம வீதி உலா நடைபெற்று வருகிறது.

விழாவில் 5ம் நாளான நேற்று முன்தினம் மாலை சிறப்பு மலர் அலங்காரத்தில் வேணுகோபாலசாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி மேள தாளங்கள் மற்றும் வாணவேடிக்கை முழங்க கிராம வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், வீடுதோறும் பெண்கள் சாமிக்கு கற்பூர தீபாராதனை காட்டி கோவிந்தா கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சேஷ வாகன சேவை உபயதாரர்கள் கிரி, திருமலை பிரகாஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர். பிரமோற்சவ விழாவில் சிறப்பு பெற்ற கருட சேவை நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது.

The post சந்தான வேணுகோபாலசாமி கோயிலில் சேஷ வாகனத்தில் சாமி வீதியுலா appeared first on Dinakaran.

Read Entire Article