ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.65,000 கோடி முதலீடு மேற்கொள்ள உள்ளதாக அதானி குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல்வர் விஷ்ணு தேவ் சாயை தொழிலதிபர் கவுதம் அதானி சந்தித்துப் பேசிய நிலையில் சத்தீஸ்கர் அரசு இந்த தகவலை அளித்துள்ளது. ராய்பூர், கோர்பா, ராய்கரில் அதானி குழுமத்தின் மின் உற்பத்தி மையங்கள் ரூ.80,000 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. அதானி குழுமத்துக்கு சொந்தமான சிமென்ட் ஆலைகளில் ரூ.5,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
The post சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.65,000 கோடி முதலீடு மேற்கொள்ள உள்ளதாக அதானி குழுமம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.