கொங்கு இயற்கை-யோகா மருத்துவ கல்லூரியில் யோகா தின விழிப்புணர்வு

3 days ago 2

 

ஈரோடு, மே 8: பெருந்துறையில் உள்ள கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனத்துடன் இணைந்து ஜூன் மாதம் 21ம் தேதி நடைபெற இருக்கும் சர்வேதேச யோகா தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய அரசு ஆயுஷ் அமைச்சகம், புதுடெல்லி மொராஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் மூலம் 100 நாட்கள் 100 நிறுவனங்கள் மூலம் 100 நகரங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

அதில் 50வது தின நிகழ்ச்சியாக கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மூலம் இந்த விழிப்புனர்வு நடந்தது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மேலும் “ஒரு பூமி ஒரு ஆரோக்கியம்” என்ற தலைப்பில் இந்த ஆண்டு யோகா தினம் நடைபெறுவதால் உலக வடிவில் மாணவர்கள் தங்களை அணி படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் கல்லூரி தாளாளர் வெங்கடாச்சலம், முதல்வர் டாக்டர் பிரதாப்சிங், துணை முதல்வர் டாக்டர் ராஜரத்தினம், டாக்டர் விஜயராகவன், டாக்டர் வசுந்தரா ஆகியோர் கலந்துகொண்டர்.

The post கொங்கு இயற்கை-யோகா மருத்துவ கல்லூரியில் யோகா தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article