சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா-தந்தேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சல்பாரி இயக்கத்தினர் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலைத் தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து கேர்லாபால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வன பகுதியில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதில், நக்சல் இயக்கத்தினருக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அப்போது, பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து நடந்த சண்டையில் நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோதலில், 2 வீரர்கள் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் கூறினார். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
The post சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.