காங். ஆதரவாளர்கள் போலீசாரிடையே தள்ளுமுள்ளு பீகாரில் மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

4 hours ago 2

பாட்னா: பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் அம்பேத்கர் விடுதி மாணவர்களுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி நேற்று கலந்துரையாட இருந்தார். இதற்காக மாணவர்களை சந்திக்க ராகுல்காந்தி சென்றார். ராகுல்காந்தியின் காரை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கிருந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் காரில் இருந்து இறங்கிய ராகுல்காந்தி நடந்தே விடுதிக்கு சென்று மாணவர்களை சந்தித்தார்.

மாணவர்களிடையே பேசிய ராகுல்காந்தி, ‘‘உங்களுக்குத் தெரியும். எனது கார் மிதிலா பல்கலைக்கழகத்தின் வாயிலிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் நான் எனது நோக்கத்தை கைவிடவில்லை. நான் வெளியே வந்து நடந்து இங்கு வந்தேன். பீகார் அரசினால் என்னை ஏன் தடுக்க முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? நீங்கள் உள்ளடக்கி இருக்கும் பரந்த ஆற்றல் திரளால் நான் உந்தப்படுவதால் தான். பிரதமர் மோடி எந்த சக்தியின் முன் தலைவணங்க வேண்டியதோ அதே சக்தி தான் இது. உங்கள் தலையினால் அரசியலமைப்பை தொட வேண்டும் என்று மோடியிடம் கூறினோம். இறுதியில் அவர் அவ்வாறு செய்தார். சாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் அவரிடம் கூறியிருந்தோம். உங்களிடம் இருந்து வரும் எதிர்வினைக்கு பயந்து மோடி கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

அரசு அம்பானி, அதானி மற்றும் அவர்களை போன்றவர்களின் நலன்களுக்கு சேவை செய்கிறது. இந்த அரசு ஐந்து சதவீத மக்களின் நலனுக்காக செயல்படுகின்றது. அரசு, பெருநிறுவனம், ஊடகங்களில் கூறி தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எந்த பங்கும் இல்லை. இளைஞர்கள் கவனம் சிதறாமல் 3 கோரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். தெலங்கானாவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பயனுள்ள சாதி கணக்கெடுப்பு, தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான துணை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்தல் ஆகியவற்றில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் ” என்றார்.

The post காங். ஆதரவாளர்கள் போலீசாரிடையே தள்ளுமுள்ளு பீகாரில் மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article