
சுக்மா,
சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் கேர்லாபால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வன பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர். நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியின் ஒரு பகுதியாக அவர்கள், மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சி.ஆர்.பி.எப். படையினருடன் இணைந்து தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து நடந்த சண்டையில் நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோதலில், 2 வீரர்கள் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் கூறினார்.