
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 12ம் தேதி அளித்த பேட்டியில், தே.மு.தி.க.வுக்கு நாடாளுமன்ற ராஜ்யசபா சீட் ஒன்று தருவதாக அ.தி.மு.க. தரப்பில் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும், யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்" என்றும் அறிவித்தார்.
இதுகுறித்து, சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேட்டியளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அப்படி எதுவும் வாக்குறுதி அளிக்கப்படவில்லை" என்று மறுத்துவிட்டார். இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், 'சத்தியம் வெல்லும் நாளை நமதே' என்று தேமுதிக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'சத்தியம் வெல்லும் நாளை நமதே #DMDKForTN #DMDKFor2026' என தெரிவிக்கப்பட்டுள்ளது.