
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் டைட்டிலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.